31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

உதவிகள் கேட்டால் உடனே செய்து கொடுப்பார் சாமிநாதன் காடேக் வாக்காளர்கள் பெருமிதம்

🔥 Views : 7
👁 Reading Now : 42

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் காடேக்கில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் மிகச்சிறந்த சேவையாளர் என்று தொகுதி வாக்காளர்கள் வர்ணிக்கிறார்கள். அங்காடி வியாபாரிகளுக்கு அவர் பெரும் உதவி புரிந்திருக்கிறார். வெள்ளத்தால் அவதிப்படும் மக்களுக்கு உடனடியாக களமிறங்கி உதவிகளை வழங்கி இருக்கிறார். கோழி வளர்ப்பு சிறுதொழில் முனைவர்களுக்கு அவர் பெருமளவில் உதவி புரிந்து இருக்கிறார் என்று காடேக் வாக்காளர் இப்ராஹிம் தெரிவித்தார். பந்தா இல்லாத ஒரு அரசியல்வாதி இவர். இன்று சக்கர நாற்காலி உட்பட எந்த உதவி கேட்டாலும் நாளையே அவர் செய்து கொடுப்பார். அவரை அலுவலகத்தில் சென்று சந்திக்கத் தேவையில்லை. எங்களை தேடி நேரடியாக வந்து விடுவார். நாங்கள் பார்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் சிறப்பானவர் சாமிநாதன் என்று அவர் வர்ணித்தார். நான் கோழிப்பண்ணையை வைப்பதற்கு கோழி குஞ்சுகள் வாங்கி கொடுத்து உதவி புரிந்தார். அவர் ஒரு நல்ல மனிதர். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மானியம் இல்லை காரணம் காட்டி தொகுதி மக்களுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles