
வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் செமினி, தஞ்சோங் காராக் மற்றும் சீலாட் கிள்ளான் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஜசெக போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாக சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் இந்த தொகுதிகளில் பெர்சத்து கட்சி போட்டியிட்டது. வரும் பொதுத்தேர்தலில் இந்த தொகுதிகளில் ஜசெக போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். கடந்த தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 16 தோகுதிகளில் போட்டியிட்ட ஜசெக வெற்றி பெற்றது என்றார் அவர்.



