
கெடாவில் இயங்குகின்ற 4-இலக்கக் கடைகளை மூடுவதென அம்மாநில பாஸ் அரசாங்கம் முடிவெடுத்த நிலை குறித்து மசீச, மஇகா, ஜிபிஎஸ்(சபா கூட்டணி கட்சிகள்) ஆகிய கட்சிகள் கள்ள மௌனம் காக்காமல் வாய் திறக்க வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுள்ளார். மலேசிக் குடும்பம் என்னும் கோட்பாட்டின்படி இதுதான் புதிய கொள்கையா என்று கேட்டுள்ள அவர், 4-இலக்கக் கடைகளும், மதுப் பழக்கமும் முஸ்லிம் அல்லாதாருக்குரியவை என்று தெரிவித்துள்ளார். பல இன கலாச்சாரம் கொண்ட மலேசியாவில், தொடர்ந்து எதிரான முடிவுகளை எடுத்துவரும் கெடா மந்திரி பெசாரின் இந்த புதிய முடிவு குறித்து இந்தக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.



