
மலாக்கா மாநில முதல்வர் வேட்பாளரை அறிவிக்காததால் பெரிக்கத்தான் நேஷனல் தோல்வி கண்டு விட்டதாக அம்மு உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி சாடியுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி சார்பில் முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பெரிக்கத்தான் நேஷனல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மலாக்கா மாநில மக்கள் எப்படி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை நம்புவார்கள் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.



