
மலாக்கா மாநில தேர்தலில் மும்முரம் காட்டிவரும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக ஊடகத் தளத்தை நியாயமாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாநில காவல்படைத் தலைவர் அப்துல் மஜிட் முகமட் அலி வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சமூக ஊடகங்களை பேரளவில் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி பரப்புரையில் ஈடுபடும்பொழுது, அவற்றை முறையாகவும் அத்துமீறாமலும் படுத்த வேண்டும். அதேவேளை, அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பரப்புரை நடவடிக்கைகளைக் கண்காணிக்க மாநில காவல்படை ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று அவர் சொன்னார்.



