
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின் கட்சி தாவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அம்னோவைச் சேர்ந்த பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து கட்சி தாவுவதை தடுப்பதற்கான செயல் முறைத் திட்டம் விரைவில் வரவிருக்கிறது. கட்சித் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவது மற்றும் கட்சி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நீக்குவதற்காக வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மனுவை தாக்கல் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதியில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.



