33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

நண்பருக்கு மரணம் விளைவித்த அல்போன்சஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு!

🔥 Views : 8
👁 Reading Now : 60

தமது நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இந்திய ஆடவரான 40 வயது எஸ்.அல்போன்சஸ் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 2021 நவம்பர் 4 -ஆம் தேதி அதிகாலை 1.00 மணியிலிருந்து 2 .00 மணிக்குள் ஈப்போ தாமான் சிலிபின் ஜாலான் பெர்சியாரான் ஜெலாபாங் 18 ,என்ற இடத்தில் ஆர்.ரவீந்திரன் ( வயது 35 ) என்பவரை கத்தியால் குத்திக மரணத்தை விளைவித்ததாக குற்றப்பத்திரிகையில் வாசிக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் அடுத்தாண்டு பிப்ரவரி 9 -ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படுமென மாஜிஸ்திரேட் நூர் மெலாத்தி டியானா அப்துல் வஹாப் தெரிவித்தார். நெஞ்சுப் பகுதியில் கடுமையான காயத்திற்குள்ளான ஆர்.ரவீந்திரன்,ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிர் இழந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles