
சமூக வலைத் தளங்களில் பரவிய ஒரு காணொளியில் பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சர் இட்ரிஸ் அகமட் மற்றும் மனித வளத் துணை அமைச்சர் டத்தோ ஹாஜி அவாங் ஹஷிம் ஆகியோர் கெடா மாநிலத்தில் 4 இலக்க எண் கடைகள் மூடப்பட்டது தொடர்பில் கேள்வி கேட்ட ஒரு பெண் நிருபரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை அப்பெண் இந்த பரபரப்பான விவகாரம் தொடர்பில் தகல்வகளைப் பெறத் தமது கடமைகளைத்தான் செய்துள்ளார். அப்பெண் கேட்ட கேள்விக்கு அதிகாரம் கொண்ட அமைச்சர், துணை அமைச்சர் என்ற முறையில் அவர்கள் பணிவாகவும் மரியாதையாகவும் பதிலளிக்க வேண்டும், மாறாக அளவுக்கு மீறிக் கடுமையாகப் பேசக் கூடாது என்றார் அவர்.



