
வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 11 தொகுதிகளில் 7 தொகுதிகளைக் கைப்பற்ற பி.கே.ஆர். இலக்குக் கொண்டிருப்பதாக கெடா பி.கே.ஆர். தலைவர், ஹலிம் பச்சேக் தெரிவித்தார். இந்த 7 தொகுதிகளில் கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரெம்பியா, கிலேபாங் மற்றும் மாச்சாப் ஜெயா தொகுதிகளும் அடங்கும். இம்முறை இன்னும் 4 தொகுதிகள், அதாவது பாயா ரும்புட், அசாஹான், ரிம், லெண்டு ஆகிய தொகுதிகள் வெல்ல பிகேஆர் இலக்கு கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.



