
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு அனைத்து கட்சிகளும் கடுமையாக பாடுபடும் பாடி பேராக் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளர் தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். நாடும் நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாம் ஒரு போதும் ஏமாந்து விடக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். இப்பொழுது மலாக்காவில் ஆளுக்கு ஒரு பக்கம் எதிரும் புதிருமாக செயல்பட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழந்து உள்ளனர். பக்கத்தான் ஹரப்பான் மட்டுமே மிகச்சிறந்த ஆட்சியை வழங்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.



