
மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மலாக்காவில் களமிறங்கியுள்ளார். மலாக்கா மாநிலத்திலுள்ள 12 தொகுதிகளுக்கு வருகை புரிந்து ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். சுங்கை ரம்பாய், ரிம், அசகான், மாச்சாப் ஜெயா, ஆயர் மோலேக், தஞ்சோங் பிடாரா, சுங்கை ஊடாங், லெண்டு, பாயா ரும்புட் மற்றும் கோத்தா லக்ஸ்மனா ஆகிய தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்திருக்கிறார்.



