29.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மித்ரா மூலம் கறவை மாடுகள் பண்ணை திட்டத்துக்கு 54 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு விவகாரம்; அமைச்சர் ஹலிமா ஒளிந்து விடக்கூடாது!

🔥 Views : 7
👁 Reading Now : 54

மித்ரா நிதி ஒதுக்கீடு மூலம் ஆஸ்திரேலியா கரவை மாடுகள் பண்ணை திட்டத்தில் 600 பேர் பங்குபெறும் வகையில் 54 லட்ச வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது . ஒருவருக்கு நான்கு மாடுகள் வீதம் 600 பேருக்கு மாடுகள் வழங்கப்படும் என்று கடந்த முறை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா பதில் அளித்துள்ளார். இதுவரை 200 பேருக்கு மட்டுமே மாடுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். இந்த கறவை மாடுகளை பெற்ற 200 பேர் யார். அந்த பட்டியலை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த மாடுகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் பெயர் என்ன என்பது தொடர்பிலும் கேள்விகளை முன்வைத்தேன். இப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பில் மீண்டும் கேள்விகளை கேட்டபோது ஒற்றுமை துறை அமைச்சு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் இப்போது மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது அதனால் இந்த திட்டம் தொடர்பில் விவரங்களை வெளியிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதுபற்றி கருத்துரைத்த பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் , ஒரு பக்கம் ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையை நடத்தட்டும். மறுபக்கம் யார் யாருக்கு மாடுகள் வழங்கப்பட்டன. இந்த மாடுகளை இறக்குமதி செய்த நிறுவனம் யார் என்பதை பதில் கூற வேண்டியது அமைச்சரின் கடமையாகும். ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை என்ற போர்வையில் அமைச்சர் ஒளிந்து கொள்ளக் கூடாது என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles