
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று 11,557 பேர் முன்கூட்டியே வாக்களித்தனர். இதில் 9,217 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியாவர். 2,340 போலீஸ்காரர்களும் இன்று வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 20 ஆம் தேதி 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



