27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

365 தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு தீர்வு காணுங்கள்!

🔥 Views : 3
👁 Reading Now : 53

நாட்டில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இதில் 162 தமிழ் பள்ளிகள் அரசு முழு உதவி பெற்ற பள்ளிகள் ஆகும். இவற்றில் 156 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே சொந்த நிலங்களை கொண்டிருக்கின்றன. தற்போது 365 தமிழ் பள்ளிகள் பந்துவான் மோடால் எனப்படும் பள்ளிகளாக விளங்குகின்றன. இந்தப் பள்ளிகள் தனியார் நிறுவனம் மற்றும் தோட்டப்புற நிலங்களில் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளும் அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளாக மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் முன்வர வேண்டுமென்று கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகும் வேளையில் இன்னமும் இன்னமும் தமிழ் புள்ளிகளின் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனையாகும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நிலப் பிரச்சினையை எதிர் நோக்கி இருக்கும் 365 தமிழ் பள்ளிகளின் எதிர்காலத்திற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு மாநில அரசும் ஒன்றாக அமர்ந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles