
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையில் இன்று பைரம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மேற்கொண்ட முயற்சியால் பைரம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகளும் தொடங்கியது. பினாங்கு மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வழங்கிய நிலத்தில் இந்த புதிய தமிழ்ப்பள்ளி மிக கம்பீரமாக கட்டப்படுகிறது என்று டாக்டர் இராமசாமி அறிவித்தார். பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மாநில அரசாங்கம் பக்க பலமாக இருக்கும் என்று அவர் சொன்னார். பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.



