32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலாக்கா இந்திய இந்தியர்களே! சிந்தித்து வாக்களியுங்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 58

நவம்பர் 20ஆம் நாள் நடைபெறவுள்ள மலாக்கா மாநில பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கூட்டணிகளிடம், அரசுசாரா அமைப்புகளின் சார்பில் கொடுக்கப்பட்ட மகஜர் சம்பந்தமான இறுதி நிலவரத்தை இதன்வழி தெரிவிக்கிறோம். மூன்று முக்கிய கூட்டணிகளில், தேசிய முன்னணி சார்பில் எத்தகைய உறுதிமொழியோ, மறுமொழியோ கிடைக்கவில்லை! பெரிக்கத்தான் நெஷனலின் மாநிலத் தலைவர், மகஜரைப் பெற்றுக் கொண்ட சமயம், முதல் கோரிக்கையான கருமக்கிரியை மையத்தை அமைக்க நிலத்தை, தாங்கள் வெற்றி பெற்றால் தங்கள் முதல் ஆட்சிக்குழு கூட்டத்திலேயே அங்கீகரிப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை பிறகு ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் உறுதி கூறினார். பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவம் சார்பில் அதன் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்ந மகஜரில் காணப்பட்டுள்ள எல்லா கோரிக்கைகளையும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்வதாக முதல்வர் வேட்பாளராக இருக்கும் அட்லி சாகாரி கையெழுத்துடன் உறுதி கூறியுள்ளனர். இதுதான் இறுதி நிலை என்பதை எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே மலாக்கா மாநில மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles