
கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு முழு தயார் நிலையில் உள்ளது. நோய்த் பரவல் மோசமான நிலையை எட்டுவதற்கான சாத்தியத்தை மதிப்பீடு செய்யும் அதே வேளையில் நெருக்கடிக்கு எதிராக எதிர்வினையாற்றுவது தொடர்பான மாதிரி திட்டத்தை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் சில அரசு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.



