
செராண்டா தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 64 லட்சம் வெள்ளி அப்படியே பத்திரமாக இருக்கிறதா என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோங் நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படாமல் இழுப்பறியில் இருக்கிறது. செராண்டா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு பிறக்கும் வேளையில் புதிய பள்ளி கட்டுவதற்கு அந்த 64 லட்சம் வெள்ளி வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



