
தற்போது தீவிரமாகத் தேடப்பட்டு வரும் ஜோ லோ இருக்குமிடம் குறித்தத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்பதை உள்துறை அமைச்சு ஒப்புக் கொள்வதாக அமைச்சர், டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார். ஜோ லோவின் மீது நீதிமன்ற வழக்கைப் பதிவுச் செய்துள்ள சிங்கப்பூர், அமெரிக்காவும் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கத் தவறி விட்டன. அதனால் விசாரணையை எதிர்கொள்ள ஜோ லோவைத் திரும்பக் கொண்டு வர அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் தேசிய போலீஸ் படையின் வாயிலாக அமைச்சு உறுதியாக உள்ளது என்றார்.



