32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் வேட்பாளர்களை ஆதரித்து அரிமா இயக்கம் தீவிர பிரச்சாரம்

🔥 Views : 10
👁 Reading Now : 51

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மலேசிய இந்திய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அரிமா இயக்கத்தின் தேசியத் தலைவர் ஐயா ஓம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் இந்நாள் வரை பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் மற்றும் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமார் உட்பட அனைத்து பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களுக்கும் அரிமா இயக்கத்தின் தேசிய பொறுப்பாளர்கள், மாநில (சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம், ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான்) தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.


மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அரிமா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles