
மித்ரா நிதி ஒதுக்கீடு ஒரு பெரிய மோசடியாகும். இது தொடர்பில் ஒற்றுமை துறை அமைச்சு பதிலளிக்க வேண்டும். அமைச்சரைக் காட்டிலும் எம்.ஏ.சி.சி. அதிக அதிகாரம் வாய்ந்ததா என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் கேள்வி எழுப்பினார். மித்ரா நிதி ஒரு மிகப் பெரிய மோசடியாகும். இதைத் திறந்த முறையில் விசாரணைச் செய்ய வேண்டும். எம்.ஏ.சி.சி. இதில் ஒரு அம்சமாகும். இந்த நிதி மோசடிக்கு அமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும் என்று குலசேகரன் கேட்டுக் கொண்டார். நேற்று நாடாளுமன்றத்தில் மித்ரா நிதி தொடர்பில் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமாவுக்கும் பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.



