
கடந்த 2020 ஆம் ஆண்டில் மலேசியாவில் மரணத்திற்கான முதன்மை காரணமாக இஸ்கிமிக் இருதய நோய் உள்ளது. மருத்துவ சான்றுபடி பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்து 9,155 மரணங்களில் 18,515 இந்நோய் தொடர்புடையவையாகும். நாட்டில் இந்நோயினால் இறப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது அதிர்ச்சிளிக்கும் செய்தியாகும். கடந்த 2000 ஆம் ஆண்டில் 11.6 விழுக்காடாக இருந்த இந்நோய்த் தொடர்புடைய மரண எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 17 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரத் துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹடின் கூறினார். இந்நோயினால் மரணமடைந்தவர்களில் 12,707 பேர் ஆண்கள் என்றும் 5,808 பேர் பெண்கள் என்றும் அவர் கூறினார். 16.6 விழுக்காட்டு பூமிபுத்ராக்களும 16.0 விழுக்காட்டு சீனர்களும் 22.8 விழுக்காட்டு இந்தியர்களும் இந்த இருதய நோயினால் இறந்துள்ளனர் என்றார் அவர்.



