
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. 28 தொகுதிகளில் மூன்று கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நாடாளுமன்ற இந்திய பிரதிநிதிகளான மாண்புமிகு கருப்பையா, சிவகுமார், டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சார்லஸ் சந்தியாகோ, டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன், குணசேகரன், பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, காமாட்சி துரைராஜ், கேசவன், சதீஸ் முனியாண்டி, கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் உட்பட கவுன்சிலர்கள் மற்றும் கிராம தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமாரை ஆதரித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் கேசவன் தீவிர பிரச்சாரம் செய்தார்.



