
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறும் வேளையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் பெரிக்காத்தான் கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று கட்சியின் தலைமைச் செயலாளர், டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் ஆரூடம் கூறினார். இருந்த போதிலும் இது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதில் இறுதி முடிவெடுக்கப்படுவதற்கு முன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அவர் கூறினார். பெரிக்காத்தானுக்கான முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.



