
கிள்ளான், ஜாலான் மெலாவிசில் உள்ள குடிசை வீடொன்றில் கடந்த வாரம் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1 லட்சத்து 17,009 வெள்ளி மதிப்பிலான 40.3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் என நம்பப்படும் 21 முதல் 49 வயது வரையிலான எட்டு உள்நாட்டினரை கைது செய்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார்.



