30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மோசடிகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மித்ராவுக்கு குறிப்பிட்ட நிதி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்!

ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய 10 கோடி வெள்ளி நிதி இனிமேல் மித்ராவுக்கு அப்படியே ஒதுக்கக் கூடாது. நிதி மோசடிகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே மித்ராவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் இந்தியர்கள் நன்மை அடையும் வகையில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிதி மோசடிகள் நிகழ்வதை தடுக்க முடியும். மித்ராவுக்கு 10 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதால் அந்த நிதி யார் யாருக்கு கிடைக்கிறது என்பதுகூட வெளிப்படையாக தெரியவில்லை. தற்போது மித்ரா நிதி மோசடி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதால் மற்ற அரசாங்க நிறுவனங்களிலும் நிதி ஒதுக்கப்பட வேண்டும். மேலும் எந்தெந்த அரசாங்க நிறுவனங்களில் நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்பதை இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles