
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெம்பான் தொகுதியில் போட்டியிட்ட மலாக்கா மாநில ஜசெக தலைவர் தெ கோக் ஹான் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார். அதேபோல் தஞ்சோங் பிடாரா தொகுதியில் போட்டியிட்ட பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மாஸ் எமியார்த்தி மற்றும் தெலுக் மாஸ் தொகுதியில் போட்டியிட்ட மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ராபிக் ஆகியோர் தோல்வி கண்டனர். மாயா ரூம்புட் தொகுதியில் போட்டியிட்ட கெஅடிலான் முக்கிய தலைவர் டத்தோஸ்ரீ சம்சூல் இஸ்கந்தார் மற்றும் அஹாசான் சட்டமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் ஆகியோரும் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். காடேக், டுரியான் துங்கால், டுயோங், பத்து பெங்கலான், பாயா ரூம்புட் ஆகிய தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகளில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வியை தழுவியுள்ளது.



