
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் தலா இரண்டு வேட்பாளர்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனர். பண்டார் ஹிலேர் மற்றும் கோத்தா லட்சமணா தொகுதிகளில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்கள் வைப்புத் தொகையை பறிகொடுத்தனர். தஞ்சோங் பிடாரா மற்றும் ஆயேர் லிமாவ் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வைப்புத் தொகையை இழந்துள்ளது. பெக்கலான் பொத்துவில் போட்டியிட்ட டத்தோ நூர் இஸாம் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



