29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கட்சித் தாவியவர்களை ஏற்றுக் கொண்டதால் பக்கத்தானுக்கு தோல்வி ஏற்பட்டதா?

🔥 Views : 3
👁 Reading Now : 61

கட்சித் தாவிய 2 பேரை ஏற்றுக் கொண்டதால்தான் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் மற்றும் பக்கத்தானும் மிகவும் தோல்வியைத் தழுவியதாகக் கூறப்படுவதை அமானாவின் தொடர்புப் பிரிவு இயக்குநர், டத்தோஸ்ரீ காலிட் சாமாட் மறுத்தார். ஒருவேளை இது மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால் பெரிக்கத்தானின் வேட்பாளர்களையும் வாக்காளர்கள் நிராகரித்திருப்பர். கட்சித் தாவுபவர்களை பெர்சத்து அதிகம் வெறுப்பதாக இருந்தால் இவர்களையே அதிகமாய்க் கொண்டிருக்கும் பெர்சத்துவுக்கு எப்படி வாக்குகள் கிடைத்தன? தஞ்சோங் பிடாரா தொகுதியின் பெரிக்காத்தான் வேட்பாளர், மாஸ் எர்மியாத்தியும் கட்சித் தாவியவர்தான். இத்தேர்தலில் அவர் தோல்வியுற்றாலும் கூட அவருக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles