
கட்சித் தாவுபவர்களை நிராகரிகக்கூடியத் தங்களின் அடிப்படைக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காததைத் தொடர்ந்து மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் குறிப்பாக ,கெஅடிலானுக்கு தண்டனைக் கிடைத்தது என்று அரசியல்வாதிகள் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமிர் தெரிவித்தார். அம்னோவின் 2 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற கெஅடிலானின் முடிவு இதில் கட்சியையே விழுங்கி விட்டது தெளிவாகக் காட்டுகிறது. இது கட்சித் தாவுபவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கையை மீறியதால் பக்கத்தான் குறிப்பாக கெஅடிலானுக்கு கிடைத்த ஒரு தோல்வியாகும். இதில் கட்சித் தாவிய 3 பேரின் தோல்வி தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.



