
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் மிகவும் மோசமானத் தோல்வியைத் தழுவியப் போதிலும் கட்சிக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் தொடர்ந்து தேவைப்படுகிறது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஹாசான் காரிம் தெரிவித்தார். கட்சித் தாவும் வேட்பாளர்களைத் தேர்வுச் செய்ய வேண்டாம் என்று நான் இதற்கு முன்பே எழுத்துப்பூர்வமான முறையில் நினைவுறுத்தி விட்டேன். ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதில் எப்படி இருப்பினும் நான் நாடாளுமன்றத்தில் ஒரு சிறு தலைவர் மட்டுமே என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். அடுத்த பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானை வழி நடத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து தேவைப்படுகிறார் என்று அவர் சொன்னார்.



