
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.ஒ.பி.யை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் மலாக்கா மாநில அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ ஆகியோருக்கு.10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்கள் இருவரும் முகக் கவசம் அணியாமல் வீடு வீடாகச் சென்றுத் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அலோர்காஜா, மஸ்ஜிட் தானா வட்டாரச் சுற்றுப் பகுதியில் எஸ்.ஒ.பி.யைப் பின்பற்றாமல் சென்ற காணொளி சமூக வலைத் தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்று அமைச்சு குறிப்பிட்டது.



