
வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணிக்கு பெரிக்கத்தான் நேஷனல் தொடர்ந்து போட்டியை கொடுக்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.



