
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஹசான் கேட்டுக் கொண்டுள்ளார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் விரைந்து நடத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அவர் கேட்டுக் கொண்டார். வரும் ஜூலை மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் பக்கத்தான் ஹரப்பானுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது என்றார் அவர்.



