
வரும் 15 ஆவது பொதுத்தேர்தல் தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் கட்சி முடிவு செய்யவில்லை என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் போட்டியிட்டது. இதில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் சொன்னார்.



