
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்வியால் மனம் உடைந்து விட வேண்டாம். அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹரப்பான் இப்போது முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென்று ஜசெக கல்விக் குழு தலைவர் லியூ சின் தோங் கேட்டுக் கொண்டுள்ளார்.. தோல்வியில் இருந்து எழுச்சி பெற வேண்டும். ஆகவே மனம் தளராமல் நாம் இப்போது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களை கவர நாம் இப்போதே அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



