26.9 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

எஸ்டோனியாவில் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் ஸ்ரீ அபிராமி

🔥 Views : 18
👁 Reading Now : 38

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியா வில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஸ்ரீ அபிராமி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தனிநபர் பனி சறுக்கும் போட்டியில் இவர் உட்பட மொத்தம் 8 பேர் பங்கேற்றனர். இதில் ஒட்டுமொத்தமாக 23.49 புள்ளிகள் பெற்று ஸ்ரீ அபிராமி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வாகை சூடினார். வரும் 2024 சீ விளையாட்டுப் போட்டி, 2028 ஆம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால இலையோர் ஒலிம்பிக் மற்றும் 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் ஸ்ரீ அபிராமி தற்போது ஐரோப்பாவில் பல அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles