26.9 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் தோல்விக்கு டத்தோஸ்ரீ அன்வாரை குறை சொல்ல வேண்டாம்!

🔥 Views : 17
👁 Reading Now : 51

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட மோசமான தோல்விக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை குறை சொல்வது சரியல்ல என்று சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடின் தெரிவித்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அவரை பதவி விலக சொல்வதும் முறையல்ல என்று அவர் சொன்னார். இதனிடையே முன்பு பெர்சத்து நம்முடன் இருந்தது. அதனால் 2018 தேர்தலில் அதன் வாக்குகள் கிடைத்தன. ஆனால் இப்போது பெர்சத்து நம்முடன் இல்லை என்று அமானா தலைவர் மாட் சாபு தெரிவித்தார். மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணிக்கு 1 லட்சத்து 22,741 வாக்குகள் கிடைத்தன. பக்கத்தான் ஹரப்பானுக்கு 1 லட்சத்து 14,457 வாக்குகள் கிடைத்தன. பெரிக்கத்தான் நேஷனலுக்கு 77,731 வாக்குகள் கிடைத்தன. இதில் பெர்சத்துவுக்கு மட்டும் 33,161 வாக்குகள் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles