
முதுபோதையில் காரை கட்டுப்படுத்த முடியாமல் கடையை மோதி தள்ளிய ஆடவர் ஒருவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அம்பாங் ஜெயா ஜாலான் கம்போங் பாசிர் என்ற இடத்தில் கார் வேகமாக வந்து கடையை மோதியதால் தளவாடங்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் தொழிலாளிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



