
மித்ராவின் நிதியைத் துஷ்பிரயோகப்படுத்தியது தொடர்பில் விசாரணை செய்யும் எம்.ஏ.சி.சி. மித்ராவின் சிறப்புக் குழுவில் ஏன் இணைந்தது என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பினார். தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை இப்போது விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது அச்சிறப்புக் குழுவில் எவ்வாறு இணைய முடியும்? பொது நிதி முறைகேட்டின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் ஓர் அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒரு சிறப்புக் குழுவை எம்.ஏ.சி.சி. எவ்வாறு அமைக்க முடியும்? இதற்கு வேறு வழி ஏதுமில்லையா? மித் ராவுடன் சம்பந்தப்படுத்தப்படும் துறையுடன் சிறப்புக் குழு அமைக்கப்படும் வரை உளவு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் நிபுணத்துவத்தை எம்.ஏ.சி.சி. கொண்டிருக்கவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.



