
அரசியல் பாரம்பரியம்மிக்க ஜசெக, இன்னமும் சீன வாக்காளர்களை மட்டும் நம்பி இருக்கக்கூடாதென்று ஜசெக தேசிய உச்சமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினருமான ரோனி லியூ தியான் கியூ கேட்டுக் கொண்டுள்ளார். மலாய், இந்திய வாக்காளர்களையும் பெருமளவில் கவரும் வகையில், மலேசிய கூட்டு சமுதாயத்திற்கான கட்சியாக ஜசெக மலர வேண்டும். அப்பொழுதுதான் தேர்தல் களத்தில் இன்னும் அதிக வெற்றியை ஜசெக அடைய முடியும் என்று ரோனி லியூ கருத்து தெரிவித்துள்ளார். மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் கண்ட தோல்வியை ஒரு படிப்பினையாக ஏற்று அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பக்கத்தான் ஹரப்பான் முழு வீச்சில் களமிறங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்



