
அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி பக்கத்தான் ஹரப்பானை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆக்கபூர்வமான நன்மைகளும் ஏற்படுத்தவில்லை. ஆகவே இனியும் காலம் கடத்தாமல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பக்கத்தான் ஹரப்பான் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



