29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

நஜிப்புக்கு எதிரான SRC 4 கோடி வெள்ளி ஊழல் வழக்கில் டிசம்பர் 8 ஆம் தேதி அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு!

🔥 Views : 5
👁 Reading Now : 33

4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட Src இண்டர்நேஷனல் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான வழக்கில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பை கூறுகிறது. நான்கு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட Src இண்டர் நேஷனல் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் 7 குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது . கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டத்தோஸ்ரீ நஜிப் அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இதன் தீர்ப்பு டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles