26.9 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

எம்ஏசிசி விசாரணை முடிந்ததும் மித்ராவில் உள் விசாரணை ஆரம்பமாகிறது

🔥 Views : 19
👁 Reading Now : 45

ஊழல் தடுப்பு ஆணையம் எனப்படும் எம்.ஏ.சி.சி.யின் விசாரணை முடிந்ததும் மித்ராவில் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக் குறித்து உள் விசாரணையை தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு மேற்கொள்ளும் என்று அமைச்சர், டத்தோ ஹலிமா முகமட் சாடிக் தெரிவித்தார். இதில் எம்.ஏ.சி.சி. உண்மையான விசாரணையை மேற்கொள்ள விடுங்கள். இது ஒரு நிறுவனம் அல்லது அரசு சாரா இயக்கம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, மாறாக இதற்கான அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார் அவர். இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles