27.5 C
Kuala Lumpur
Tuesday, July 21, 2026

Vetri

சிலாங்கூரில் முழு கட்டுப்பாட்டு ஆணை?
எங்களுடன் விவாதியுங்கள்!

🔥 Views : 23
👁 Reading Now : 58
File Picture

சிலாங்கூர் மாநிலத்தில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்வது தொடர்பில் மாநில அரசுடன் விவாதிக்க வேண்டும்.
அதன் பின்னரே ஆணை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

முழுமையான பொது முடக்கம் என்பது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவின் கருத்து.

இவ்விவகாரம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதில் மாநில அரசின் பங்கு என்ன? நாங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிகைகள் யாவை போன்ற விபரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு எடுக்கும். எங்களை பொறுத்த வரை இந்த நடவடிக்கைகள் யாவும் இன்னும் பூர்வாங்க நிலையிலே உள்ளன என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுவதாக டத்தோஸ்ரீ அடாம் பாபா கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles