34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புக்கு கூடுதல் மானியம் கேட்டு விண்ணப்பம்!

🔥 Views : 38
👁 Reading Now : 24

பினாங்கு தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடட நிர்மாணிப்புப் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வரும் வேளையில் அதற்கு கூடுதல் மானியம் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மாற்றி இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய முன்னணி அரசாங்கம் 4 ஏக்கர் நிலத்தை வழங்கியதோடு நிர்மாணிப்புக்காக 35 லட்சம் வெள்ளி மானியத்தையும் தந்தது.

தற்போது பள்ளி கட்டட நிர்மாணிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் வழங்கியுள்ள மானியம் போதாதா நிலையில் கூடுதல் மானியம் கேட்டு கல்வியமைச்சிடம் விண்ணப்பம் செய்துள்ளதாக பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் மோகன் சின்னையா தெரிவித்தார். மானியம் கிடைக்கபெற்றால் இன்னும் ஓராண்டில் பள்ளி கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் புதிய பள்ளியில் கல்வியை தொடர்வர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles