
2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை நாளை மாலை 3.00 மணிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். சிலாங்கூர் மாநில பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து நாளைய பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. அனைத்து இன மக்களுக்கும் நன்மை பயக்கும் பட்ஜெட்டாக இது விளங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் மாநில மக்கள் நாளை மாலை 3.00 மணிக்கு சிலாங்கூர் பட்ஜெட்டை மீடியா சிலாங்கூர் மூலம் நேரடியாக கண்டு மகிழலாம்.
