
போலீசார் மேற்கொண்ட இரண்டு அதிரடி சோதனைகளில் அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப் பட்டிருப்பதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
மூவாரில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் ஒரு ஜொகூர் பாருவில் வாடகை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கு 3 கோடியே 2 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
