34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

நவம்பர் 30 ஆம் தேதி மலேசியக் கிண்ண போட்டி இறுதியாட்டம்! 20,000 டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை

🔥 Views : 28
👁 Reading Now : 69

வரும் நவம்பர் 30 ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசிய கிண்ணக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற ஜொகூர் ஜெதிடி, திரெங்கானு எப்சி, கேஎல் சிட்டி மற்றும் மலாக்கா யுனைடெட் குழுக்கள் போராடி வருகின்றன. மேலும் இறுதி ஆட்டத்திற்கு பெறப்போகும் இரண்டு குழுக்கள் எது என்பது இன்றிரவு தெரிந்துவிடும் வேலையில் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் மலேசிய கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தை முன்னிட்டு நாளை முதல் 20,000 டிக்கெட்டுகள் இணையம் வழி விற்பனை செய்யப்படுகிறது என்று மலேசிய கால்பந்து சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டூவர்ட் இராமலிங்கம் தெரிவித்தார். 50 வெள்ளி, 70 வெள்ளி,80 வெள்ளியில் டிக்கெட்டுகள் விற்கப்படும் வேளையில் பிரிமியம் இருக்கைக்கு 150 வெள்ளி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். www.tickethotline.com மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles