29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

தாய்மொழி பள்ளிகளை அழிக்க நினைக்கும் தரப்புகளை வன்மையாக சாடினார் பேராசிரியர் டாக்டர் இராமசாமி

🔥 Views : 26
👁 Reading Now : 44

நாட்டில் தாய்மொழி பள்ளிகளை அழிக்கும் வகையில் மூன்று தரப்புகள் வழக்கு தொடுத்துள்ளது மலேசியர்களின் குடும்பம் உணர்வு கோட்பாட்டுக்கு எதிரானது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கடுமையாக சாடியுள்ளார். இனவாத அடிப்படையில் அந்த மூன்று தரப்புகளும் தாய்மொழி பள்ளிகளை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற நோக்கில் வழக்கு தொடுத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். தாய்மொழிப் பள்ளிகளை ஒரு போதும் அகற்ற முடியாது. தாய்மொழி பள்ளிகள் யாருக்கும் எதிரானவை அல்ல. ஆகவே நாம் தாய்மொழி பள்ளிகளை காப்பதில் ஒன்றுபட்டு போராடுவோம் என்று டாக்டர் இராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles